நல்ல உணர்வுகளால் நம்மை நிரப்புவோம் dinamalar.com
முகநுாலின் மெசெஞ்சர் பகுதியில் செய்தி ஒன்று வந்த நாள்… யாரென்று பார்க்கும் போது நட்பின் இணைப்பில் இருப்பவர் எனப்புரிந்தது. நட்பில் இருக்கும் அந்தப் பெண்ணின் செய்தி ஒரு இணக்க உணர்வைத் தர ஆரம்பித்தது.தினந்தோறும் ஒரு குட் மார்னிங்கில் ஆரம்பித்து மெல்ல சகஜமாகப் பேசஆரம்பித்து புற்று நோயின் நான்காவது கட்டம் என்பதை கூறி அவரது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களைப் பகிர ஆரம்பித்து இருந்தார்.
ஆனால் எந்தசமயத்திலும் பணம் தேவை என்பதை நேரிடையாக அவர் கேட்கவில்லை என்றபோதிலும் மறைமுகமாக அவரது உணர்வுகளால் அதை உணர்த்துவது போல இருந்தது. பணம் ஏதும்தேவைப்படுமா என்று ஒருகட்டத்தில் நானாகவே கேட்க ஆரம்பித்தபோதுதான் அதைச்சொல்ல ஆரம்பித்தார். மருந்து வாங்ககூட காசில்லை, சாப்பிடலை என்ற வார்த்தைகள் எனக்குள் ஏதோ ஒன்றைத்துாண்டியது. பாவம் என்று நான் யோசிக்க ஆரம்பித்தது தான் உணர்வின் துாண்டல் என்பது புரியவில்லை எனக்கு. பணம் கொடுக்கலாம் என்று யோசித்தபோது உள் மனது என்னிடம் சற்று நிதானிக்கச்
சொன்னது. பணம் கொடுப்பதில் சுணக்கம் காட்டினேன்.
Report Story