விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை dinamalar.com
பெங்களூரு:கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள, ஜெ., தோழி சசிகலா, 66, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் முடிவடைந்து, வரும், 27ல், அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக, சிறை நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது.இரண்டு நாட்களுக்கு முன், சிறையில், சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள, பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், உயர் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாற்றப் பட்டார்.அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால், தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக, சிறை நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது.இரண்டு நாட்களுக்கு முன், சிறையில், சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக, சிறை நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது.இரண்டு நாட்களுக்கு முன், சிறையில், சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.